விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பெண்களை கல்லால் அடித்துக்கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்

ISISஈராக்கின் மொசூல் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்களை கல்லால் அடித்துக் கொன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளனர்.தங்களது வீரர்களால் கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண்களை ஷரியா நீதிமன்றத்தின் முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிறுத்தியுள்ளனர். மேலும் அப்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக விசாரித்த ஷிரியா நீதிமன்ற தலைவர்கள் அந்த நான்கு பெண்களை கல்லால் அடித்து கொல்லும்படி தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து, மொசூல் நகரில் பொதுத்திடலில் திரளாக திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் நான்கு பெண்களும் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply