தென்னாப்பிரிக்கா செல்லும் விமானத்தில் கோடிக்கணக்கான பணம், சடலம் கண்டுபிடிப்பு
ஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து வெளியாகும் தி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரத்தைத் தற்போது காவல்துறையினர் விசாரித்துவருவதாக ஜிம்பாவேயின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் தென்னாப்பிரிக்காவின் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானவை என உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான சரக்கை எடுத்துச் சென்ற விமானம் ஒன்று ஹராரேவில் நிறுத்தப்பட்டபோது, அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டதைடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது என தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரியான பிரதீப் மகராஜ் தெரிவித்தார்.
அந்த விமானத்தில் உள்ள பணத்தை விடுவித்து தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பச் செய்வதற்கான முயற்சிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது என அவர் கூறினார்.
ஃப்ளோரிடாவில் இருந்து இயங்கும் வெஸ்டர்ன் குளோபல் ஏர்லைன்சிற்குச் சொந்தமான இந்த விமானம் ஜெர்மனியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்தது. எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக ஹராரேவில் இறங்குவதற்கு அனுமதி கேட்டு, அங்கே இறங்கியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply