ஜேர்மனியில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு தாய்நாட்டுக்கு வர அழைப்பு!

janathipathi02.18போரின் போது, சிறிலங்காவில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்கள் அனைவரையும், மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. ஜேர்மனிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், நேற்று பெர்லினில், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெலை சந்தித்த பின்னர், அவருடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,

 

அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நாடாக சிறிலங்கா மாறிவிட்டது.

 

இத்தகைய நிலையில், போரின் போது, சிறிலங்காவை விட்டு வெளியேறி, ஜேர்மனியில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.” என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply