நான் தப்பி விட்டேன் : பலருக்கு மின்சார கதிரை தயார் : மஹிந்த

MAHINDAஎதிர்வரும் நாட்களில் பெரும்பாலானவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்லவேண்டி ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றியது இந்த அரசாங்கமே என கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். இது குறித்து அவரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டவர், மின்சாரக் கதிரையிலிந்து என்னைக் காப்பாற்றினாலும், பெரும்பாலானவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்லவேண்டி ஏற்படும். இவ்வாறு மின்சாரக் கதிரைக்கு செல்லவுள்ளவர்களையும் காப்பாற்ற அரசாங்கம் செயற்பட வேண்டும்.

 

கண்மூக்கு தெரியாமல் முன்னெடுக்கப்பட்டு வரும் பழிவாங்களையும் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைச்சாலையில் விசேட சிறையில் காற்றுக்கூட புக முடியாமல் எனது மகன் அடைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கினால், அவர்கள் புதிதாக ஒரு கட்சியை உருவாக்குவது உறுதியானது. இதனால், ஸ்ரீ.ல.சு.கட்சிக்குத் தான் பாரிய பாதிப்பு ஏற்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply