ஈராக்கில் ராணுவ வீரர்களை கொன்று குவித்த 40 ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

isisஈராக்கில் ராணுவ வீரர்களை கொன்று குவித்த 40 ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.ஈராக்கில் கடந்த 2014–ம் ஆண்டு திக்ரித் நகரையும் அதன் சுற்று வட்டார பகுதிகளையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அவர்களுடன் போரிட்ட ஈராக் ராணுவ வீரர்களை சிறைபிடித்து அமெரிக்கா பயன்படுத்திய விமானப்படை தள முகாமில் அடைத்து வைத்திருந்தனர்.அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 1700 ராணுவ வீரர்களை ஒட்டு மொத்தமாக குழிக்குள் தள்ளி சுட்டுக் கொன்று புதைத்தனர். அந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இச்சம்பவம் கடந்த 2014–ம் ஆண்டு ஜூலை 24–ந்தேதி நடந்தது.

தற்போது திக்ரிக் பகுதியை அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஈராக் மீண்டும் தன் வசமாக்கியுள்ளது. அதை தொடர்ந்து ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு பாக்தாத் மத்திய குற்றப்பிரிவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 40 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply