சீபா ஒப்பந்தத்தை எதிர்த்தமையினாலேயே இந்தியா ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது

HELIYAசீபா ஒப்பந்தத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செயற்பட்டமையினால் இந்தியா றோ அமைப்புடன் உள்ளுர் சக்திகளை கொண்டு இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. மறுபடியும் சீபா ஒப்பந்தத்தை வேறு பெயரில் கைச்சாத்திட நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டிற்கு எதிராக பல்வேறு நெருக்கடியான சூழல் தற்போது ஏற்பட்டுள்ள போதிலும் அதனை தட்டிக்கேட்க எதிர்க் கட்சி இல்லை .

 

பெயரளவில் எதிர்க் கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது. எனவே ஜனநாயகத்தின் நான்காம் கண்ணாக கருத கூடிய ஊடகங்களை நம்பியே தாம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply