கச்சைதீவு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

kachaகச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.இன்று மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாப்பணிகளைத் தொடர்ந்து நாளை (21) காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, அதி வணக்கத்திற்குரிய யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத் திருப்பலி பூசையும் இடம்பெறவுள்ளன. இந்த வருடம் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களும், இலங்கையில் இருந்து 3 ஆயிரம் யாத்திரிகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாத்திரிகர்களுக்கான குடிநீர், உணவு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்திற்குமான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

யாத்திரிகர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையினரும், தனியார் போக்குவரத்துச் சபையினரும் இணைந்து செய்கின்றார்கள். 20 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் நெடுந்தீவிற்கு புறப்படும். இந்த வாகன ஒழுங்குகள் இன்று காலை 11.30 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

படகு சேவைகள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவானில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.30 மணிவரை நடைபெறும். அத்துடன், 21 ஆம் திகதி தமது இல்லங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களின் படகு சேவைகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.

திருவிழாவில் இரண்டு நாடுகளிலிருந்தும் கலந்துகொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான உணவு வசதிகள் மற்றும் குடிநீர் சுகாதார வசதிகள் கற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கையிலிருந்து செல்லவுள்ள யாத்திரிகர்கள் எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை காலை 4 மணிமுதல் நண்பகல் 1.30மணிவரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவன் வரை பேருந்தில் பயணித்து அங்கிருந்து படகு மூலம் கச்சைதீவு நோக்கி பயணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply