இந்தியா-நேபாளம் திறந்தவெளி எல்லையை தீவிரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: மோடி

modiஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மோடி பேசியதாவது.பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. இதற்கு பங்களிப்பை வழங்கிய அரசியல் தலைவர்களை பாராட்டுகிறேன். ஆனால் இந்த வெற்றியானது கருத்தொற்றுமை மற்றும் பேச்சுவார்த்தையால் வந்தது. இந்த கொள்கையின் அடிப்படையில் அரசியலமைப்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் உங்களால் (ஒலி) தீர்க்க முடியும் என நம்புகிறேன்.

நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளம் ஏற்படவேண்டும் என இந்தியா எப்போதும் விரும்புகிறது. நமது திறந்தவெளி எல்லையைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும் குற்றவாளிகளும் ஊடுருவ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதற்காக இருநாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

நேபாளத்தின் ஸ்திரத்தன்மையானது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. இரு நாடுகளும் தீவிரவாத்தை எதிர்த்து போராட ஒப்புக்கொண்டுள்ளது.

வர்த்தகமும் முதலீடும் இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் பலமான தூண்கள். தேராய் பிராந்தியத்தில் கூட்டு முயற்சியில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள், வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும்.

நேபாளத்தை நிலநடுக்கம் தாக்கியபோது, அதன் வலியை ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தான். நமது ஒரு பில்லியன் டாலர் நிதி உதவி அந்த பகுதியில் நமது ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும்.

இவ்வாறு மோடி பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply