சிங்கப்பூரில் மகனின் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் ராஜித

rajithaமேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு சென்றுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் தனது மகன் ஷத்துரவின் பிறந்த தினத்தை சிங்கப்பூரில் வைத்தே கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்பொழுது அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகத்துடன் காணப்படுவதாகவும் ஓய்வில் உள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று  மாலை விசேட பரிசோதனையொன்றுக்கு உட்படுத்தப்பட்டதாக நெருங்கிய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, அமைச்சரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையென அமைச்சரின் ஊடகப் பேச்சாளர் நிபுன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply