விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்ததாக சபாநாயகர் தனபால் அறிவிப்பு
தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நிலக்கோட்டை புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி, அணைக்கட்டு பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. கலையரசுவும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பதவிவிலகல் கடிதத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் வழங்கினர்.
தற்போது, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரது ராஜினாமா கடிதமும் ஏற்கப்பட்டது. தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என்று சபாநாயகர் தனபால் இன்று அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் தற்போது எந்தஒரு கட்சிக்கும் 24 உறுப்பினர்கள் கிடையாது, எனவே எந்தஒரு உறுப்பினரையும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கமுடியாது என்று தனபால் தெரிவித்து உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply