போகிற போக்கில் நாட்டில் பௌத்த மதத்துக்குள்ள சிறப்பு இல்லாமல் போகும் :ஜாதிக ஹெல உறுமய கட்சி
ஆர்ப்பாட்டம் மற்றும் வேறு சமூக நடவடிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டு பிக்குகளைக் கைது செய்ய முன்னர், குறித்த பிக்குகள் வகிக்கும் பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது சமாதான காலமாகும். சிறு சிறு பிரச்சினைகளுக்காக பிக்குகளை சிறையில் தடுத்து வைப்பதன் ஊடாக பிக்குகளின் ஆடைக்கு இருக்கும் கௌரவத்துக்குப் பாதிப்பாக அமைகின்றது.
பிக்குகளின் கைதின் மூலமும், நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் எழுந்து வரும் கருத்துக்களையும் அவதானிக்கும் போது, இந்நாட்டில் பௌத்த மதத்துக்கு இருக்கும் சிறப்பிடம் இல்லாமல் போகுமோ என்ற சந்தேகம் பௌத்த சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply