இந்தியர்களின் வேலை வாய்ப்பை பறிப்பேன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8–ந் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயக கட்சியும், குடியரசுகட்சியும் ஈடுபட்டுள்ளன. ஜனநாய கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டெனால்டு டிரம்ப ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.இவருக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் கடும் செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் ஒரு டி.வி.க்கு பேட்டியளித்தார். அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்களில் 58 சதவீதம் பேர் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்கள் வாழ்க்கை வெள்ளையர்களை விட மிகவும் கீழ் நிலையில் உள்ளது.
சீனா, இந்தியா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அளிக்கின்றன. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வருவேன்.
அங்கு வேலையின்றி தவிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அவற்றை வழங்குவேன் என்றார். டொனால்டு டிரம்பின் இப்பேச்சு இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
69 வயதான டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய நபர். இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார். முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடக் கூடாது என பேசி சர்ச்சையில் சிக்கியவர். தற்போது இந்தியர்களுக்கு எதிராக பேசியுள்ளார்.
தெற்கு கரோலினா உள்ளிட்ட 2 மாகாணங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் வெற்றி பெற்றுள்ளார். 3 மாகாணங்களில் 2–வது இடத்தை பெற்று வேட்பாளர் தேர்தலில் முன்னணியில் இவர் உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply