ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் வேலைவாய்ப்புகள் பாதிக்கும்: பிரிட்டன் தொழிலதிபர்கள் எச்சரிக்கை

ENGALAND EUROBAகடந்த சில ஆண்டுகளாகவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இணைந்திருப்பதால், பிரிட்டன் பின்னடைவுகளை எதிர்நோக்குகின்றது என்ற எண்ணமும், விவாதங்களும் வலுத்து வந்தன.இந்நிலையில் கடந்த பிரிட்டன் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் மீண்டும் வென்று வந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பது குறித்து, பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவேன் என டேவிட் கேமரூன் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படியே, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்புக்கான நாளாக ஜூன் 23ஆம் தேதியை நிர்ணயித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் அறிவித்தார்.

இதற்கிடையில், பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கேமரூன், மற்ற தலைவர்களுடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளின் காரணமாக, இனி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறப்பு அந்தஸ்துடன், சில சலுகைகளுடன் இயங்கும் என்றும் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன், பாதுகாப்பான, பலம் வாய்ந்த நாடாக பிரிட்டன் தொடர்ந்து திகழ்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதே ஒரே வழி என்றும் கேமரூன் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கும் என்று பிரிட்டன் தொழிலதிபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பென்சார், வோடபோன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் முதலாளிகள் கையெழுப்பமிட்ட கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால், பிரிட்டனில் முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் இந்த கடிதத்தில் முக்கியமான பல நிறுவனங்கள் கையெழுத்திடவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply