பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான தோட்டாக்கள் ஆப்கானுக்கு பரிசாக வழங்கியது ரஷ்யா
நானும் ரவுடிதான் என்று களமிறங்கிவிட்டது ரஷ்யா. சிரிய உள்நாட்டு போரில் திடீரென களமிறங்கியதன் மூலம் உலகின்
நாட்டாமையாக வலம் வந்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தது ரஷ்யா. தற்போது தன் கவனத்தை
ஆப்கானிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கியதும் தலிபான்களின் ஆதிக்கம்
தலையேடுக்க தொடங்கியது. தற்போது இந்த வாய்ப்பை ரஷ்யா பயன்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளது. இன்று ஆப்கானுக்கு 10
ஆயிரம் தான்யியங்கி துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான தோட்டாக்கள் ஆப்கானுக்கு பரிசாக வழங்கியுள்ளது ரஷ்யா.
இது பற்றி ஆப்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது “ இது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையேவுள்ள நட்பை
வெளிப்படுத்துவதாக உள்ளது. ரஷ்யாவின் இந்த நன்கொடையானது முக்கியமான காலகட்டத்தில் கிடைத்துள்ளது” என்று
தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply