பேஸ்புக் நிறுவனருக்கு வீடியோ மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், டுவிட்டரின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே ஆகிய இருவருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.சமீபத்தில் பேஸ்புக்கும், டுவிட்டரும் தீவிரவாத்திற்கு எதிரான போரில் தாங்களும் இணைந்து கொள்வதாக அறிவித்தன. மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கவும் தொடங்கின. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தான்.
டுவிட்டர் நிறுவனம் மட்டும் சுமார் 1.25 லட்சம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகளை முடக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோவில் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் ஜேக் டோர்சே படங்கள் குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளது போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. 25 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் ஜேக் டோர்சேக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டுவிட்டர் ஊழியர்களும் ஐ.எஸ். ஆதரவாளர்களின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply