போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு குறித்து ஆராயப்படுகிறது : மங்கள
இலங்கையின் 26 வருடகால யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது சர்வதேச தரப்பினரை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய்வதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், போர்க்குற்றங்கள் குறித்த பாரபட்சமற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டவர்களின் பங்களிப்பு தேவையல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.
இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை மீறியிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கை மீது எந்தவொரு விடயத்தையும் திணிக்கவில்லை, எனினும் அனைத்து நடவடிக்கைகளும் பக்கச்சார்பற்ற சுயாதீனமானதாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச பங்களிப்பு தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் வொசிங்டனில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வென்றில் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply