இளவரசர் வில்லியம் மனைவியுடன் ஏப்ரல் 10–ந்தேதி இந்தியா வருகை
இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் ஏப்ரல் 10–ந்தேதி இந்தியா வருகிறார்.இளவரசர் வில்லியம். அவரது மனைவி கேத் மிடில்டன். மிக பிரபலமான இங்கிலாந்து அரச குடும்ப தம்பதிகளான இவர்கள் வருகிற ஏப்ரல் 10–ந்தேதி மும்பை வருகின்றனர்.இவர்களுடன் குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் ஆகியோரும் வருகை தருகின்றனர். இவர்கள் ஏப்ரல் 14–ந்தேதி பூடான் தலைநகர் திம்பு செல்கின்றனர்.ஏப்ரல் 16–ந்தேதி மீண்டும் இந்தியா திரும்புகின்றனர். அன்று காதல் நினைவு சின்னமும், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிடு கின்றனர்.
24 ஆண்டுகளுக்கு முன்பு 1992–ம் ஆண்டு இளவரசர் வில்லியமின் தாயார் இளவரசி டயானா தனது கணவர் சார்லசுடன் வந்திருந்தார். அங்கு தனது கணவருடன் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார். அதன்பின்னர் சில மாதங்களில் அதாவது 1992 டிசம்பரில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.
ஏப்ரல் 10–ந்தேதி மும்பை வரும் இளவரசர் வில்லியம் மறுநாள் 11–ந்தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு 13–ந்தேதி வரை 3 நாட்கள் தங்குகிறார். இவர்களது பயணத்தால் இந்தியா– இங்கிலாந்து இடையேயான உறவு மேம்படும் என கென் சிங்டன் அரண்மனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply