மர்ம நோயால் உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி: மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிரம் – நீங்களும் உதவலாம்
மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த கல்லூரி மாணவியின் உயிரைக் காப்பாற்ற அவரது பெற்றோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ்(24) என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் வைத்தியம் தொடர்பாக இறுதி ஆண்டில் படித்து வருகிறார்.வித்யா அல்போனஸ்க்கு கடந்த சில வாரங்களாக திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவருக்கு லூக்கிமியா என்னும் ரத்த புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாணவியின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக குருத்தணு மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாணவியின் சகோதரர் குருத்தணு கொடுக்க முன் வந்தார். இதையடுத்து அவரது சகோதரரின் குருத்தணுவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் வெறும் 50 சதவீதம் மட்டுமே மாணவியின் குருத்தணுவுடன் ஒத்துப்போனது. எனவே, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அவருக்கு குருத்தணு தானம் பெறுவதற்காக, குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இரத்தம் மற்றும் குருத்தணு தானம் பெற்றுத்தரும் ‘அந்தோனி நோலான்’ என்ற தொண்டு நிறுவனம் இதற்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. எனினும், தெற்காசிய நாடுகளை சேர்ந்த யாரும் இந்த அமைப்பில் கொடையாளர்களாக பதிவு செய்திருக்கவில்லை என்பதால் வித்யாவுக்கு பொருந்தக் கூடிய குருத்தணுவை தானம் பெறும் முயற்சியில் சிறிது பின்னடைவு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
குருத்தணு (Stem cell) தானம் செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ள.., To sign up to the donor list go to www.anthonynolan.org if you’re 16-30. For more information phone the charity on: 0303 303 0303
இதுகுறித்து மாணவி வித்யா அல்போனஸ் கூறியதாவது:
எனக்கு ஆதரவாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். அவற்றைப் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் அனுப்பிய செய்திகள் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவது நன்மை ஏற்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply