ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா அழிக்கும்: ஒபாமா ஆவேசம்

obamaஐ.எஸ். தீவிரவாதிகளுடனான சண்டை கடினமானது என்றாலும் அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் என்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை இந்த உலகத்திற்கு அமெரிக்கா வழங்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவேசமாக பேசினார்.அதிபர் ஒபாமா தனது வாராந்திர உரையில் பேசியவை பின்வருமாறு:-

நகர்ப்புறங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்றி வருகின்றனர். அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களையும் கொன்று குவித்து தனக்கு சாதகமாகவும், கேடயமாகவும் பயன்படுத்தி வருகிறது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்.

அரபு நாடுகள் உட்பட 66 நாடுகளின் கூட்டு ராணுவ உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை நீடித்து வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்த சண்டையில் பல நாடுகள் தங்களது பங்களிப்பையும், உதவியையும் வழங்கி வருகின்றன. அந்த நாடுகளுக்கு அமெரிக்கா நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் தற்போது வெளிநாடுகளில் இருந்து சிரியாவில் உள்ள தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விரைவில், சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கைவசம் உள்ள பகுதிகள் மீட்கப்படும். போர்க்களத்தில் மிகக்குறைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளே தற்போது எஞ்சியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதும், பயிற்சிகளை வழங்குவதும் இயலாத காரியமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply