அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: சவுத் கரோலினாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் சவுத் கரோலினாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தீவிரமாக உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து பலர் களம் இறங்கினர். இறுதியில் இவருக்கு பெர்னியே கான் டெர்ஸ் கடும் போட்டியாக திகழ்கிறார். இவர்கள் இருவரும் மாகாண வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதுவரை லோவா, நிவேடா, நியூஹாம்சியர் மற்றும் சவுத் கரோலினா ஆகிய 3 மாகாணங்களில் வேட்பாளருக்கான தேர்தல் நடந்துள்ளது.அவற்றில் லோவா, நிவேடாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.
நியூ ஹாம்ப்சியூரில் மட்டம் காண்டெர்ஸ் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று சவுத் கரோலினாவில் பிரசாரமும், அதை தொடர்ந்து தேர்தலும் நடந்தது.இருவரும் தங்களது கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் காரசாரமாக விவாதித்து கருத்துக்களை வெளிப்படுத்தினர். இறுதியில் நடந்த ஓட்டுப்பதிவில் ஹிலாரி கிளிண்டன் அமோக வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து ஆதரவாளர்கள் அவருக்கு வாழ்த்து கூறினர். இதன் மூலம் 4 மாகாணாங்களில் நடந்த தேர்தலில் 3 மாகாணங்களில் அவர் வென்றுள்ளார்.வெற்றி பெற்ற ஹிலாரி கிளிண்டனுக்கு அவருக்கு எதிராக போட்டியிட்ட சான்டெர்ஸ் வாழ்த்து கூறினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு சவுத் கரோலினாவில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவிடம் ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply