பாகிஸ்தானின் இறையான்மை தீவிரவாத குழுக்களால் களவாடப்படுகிறது: அமெரிக்கா எச்சரிக்கை

johneலஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத குழுக்களால் பாகிஸ்தானின் இறையான்மை களவாடப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைச்சர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் வெளியுறவு பாதுகாப்பு துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஷ் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி ஆகியோர் தலைமையில் இருநாட்டு குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.   

 

இருநாடுகளுக்கிடையே 6-வது கட்டமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பொருளாதாரம், நிதி, ஆற்றல், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தீவிரவாதத்திற்கு எதிர் நிலைப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவையில் இந்த பேச்சுவார்த்தையின் போது முக்கிய அங்கம் வகித்தன.

 

அப்போது பேசிய ஜான் கெர்ரி லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத குழுக்களால் பாகிஸ்தானின் இறையான்மை களவாடப்படுவதாக தெரிவித்தார்.

 

மேலும் ”தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானின் எதிர்காலத்தையும் சூறையாடுகின்றனர். பாகிஸ்தானுக்கு துணை நிற்பது முக்கியமான விஷயம்” என்றும் அவர் கூறினார்.

 

இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஷ் தீவிரவாதத்தை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

 

எப்௧6 போர் விமான சர்ச்சைக்கு இடையில் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply