அல்கொய்தா தலைவர் பின்லேடனிடம், நவாஸ்செரீப் நிதி உதவி பெற்றதாக புகார்

Nawaz-Sharifபாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப்பிரிவின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் அதிகாரியாக இருந்தவர் காலித் கவாஜா. இவர் கடந்த 2010–ம் ஆண்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.அவரது மனைவி ஷமாமா காலித் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். சமீபத்தில் அது வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் நவாஸ் செரீப்க்கும், சுட்டுக் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து தெரிவித்துள்ளார்.அதில், ‘‘ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்லேடன் ஈடுபட்டிருந்த போது அவருடன் காலித் கவாஜாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் நவாஸ்செரீப், பின்லேடனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

பாகிஸ்தானில் 1990–ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்றார். நாட்டில் இஸ்லாமியத்தை அமல்படுத்துவதாக பின்லேடனிடமும், காலித் கவாஜாவிடமும் நவாஸ்செரீப் உறுதி அளித்தார்.

அவரது வாக்குறுதியை நம்பிய பின்லேடன் தேர்தல் செலவுகளுக்காக நவாஸ் செரீப்புக்கு நிதி உதவி செய்தார். அதன் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ்செரீப் நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டார்.

அவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply