உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட முடியாது : விமல் வீரவங்ச
எந்தவொரு காரணங்களுக்காகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.நேற்று இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல்களை நடத்தும் பூரண அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கே உள்ளதாகவும், அதனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் அவரைச் சந்தித்தாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் எமது பிரச்சினைகளைக் குறிப்பிட்டோம், அவர் தேர்தல்கள் அடிக்கடி பிற்போடப்படுவதற்கான காரணத்தை தௌிவுபடுத்தினார். ஆனால் நாம் இங்கு வந்தது தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அல்ல. எது எவ்வாறு இருப்பினும் அடிக்கடி தேர்தலை பிற்போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply