இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க சீனா முடிவு
சீனாவை ஒட்டி உள்ள தென் சீன கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகள் ஜப்பானிடம் இருக்கின்றன. அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் இந்த பகுதியில் ஒரு செயற்கை தீவையும் சீனா உருவாக்கி வருகிறது. அதேபோல சில தீவுகளுக்கு தைவான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதில் தைவான், ஜப்பான் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. தென்சீன கடல் பகுதியின் ஊடி தீவை சீனாவைத் தவிர தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
இதனால் அந்த நாடுகளுக்கு மத்தியில் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனா பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் வரும் சனிக்கிழமை அதன் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 20 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தென் சீனக் கடற்பகுதியை ராணுவ மயமாக்கும் நடவடிக்கையை சீனா எடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply