பாசிஸத்திற்கு எதிராக போராடிய அமெரிக்க வீரர் 100-வது வயதில் மரணம்

USA 1930-களில் ஸ்பானிசில் நிலவி வந்த பாசிஸத்திற்கு எதிராக போராடிய அமெரிக்கர் தனது நூறாவது வயதில் தற்போது மரணமடைந்துள்ளார். டெல்மெர் பெர்க் என்ற அவர் வடக்கு கொலம்பியாவில் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். ஸ்பானிய உள்நாட்டு போர் ஏப்ரல் 1939 முதல் 17 ஜுலை 1939 வரை ஸ்பெயினில் நடந்த பெரிய உள்நாட்டு போர் ஆகும். ஜெர்மனி மற்றும் இத்தாலி கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத படைகளுக்கு ஆதரவு கொடுத்தன.

 

சோவியத் யூனியன் தனது ஆதரவை இடதுசாரி சிந்தனை உடைய அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஸ்பானிய குடியரசுக்கு கொடுத்தது. இந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான்.

 

இந்த கிளர்ச்சியின் போது, ராணுவம் தலைமையிலான பிராங்கோவின் படைகளின் தாக்குதலில் இருந்து குடியரசினை பாதுகாக்க அமெரிக்காவில் இருந்து 2,800 பேர் கொண்ட படை ஸ்பானிஷ்-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த படையில் இருந்தவர் தான் டெல்மெர் பெர்க்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெர்க் நேர்காணல் ஒன்றில் பேசிய போது, “நான் ஒரு உழைப்பாளி, நான் ஒரு விவசாயி. நான் ஸ்பானிஷ் உழைப்பாளி மக்களுக்காக செயல்பட்டேன். ஸ்பானிஷ் மக்களுக்கு உதவி செய்ய விரும்பினேன்.” என்று கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply