மரம் முறிந்து விழுந்து ஆசிரியையும் மாணவியும் பலி
வவுனியா மகாரம்பைக்குளம், திருஞானசம்பந்தர் கலவன் பாடசாலையில் பாலை மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும், மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 12 மாணவர்கள் வரை காயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் இன்று நண்பகல் 11.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரம் பழமை வாய்ந்ததாக இருந்த நிலையில் இதற்கு கீழ் இருந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் மரணமடைந்த ஆசிரியை ராஹினி என அடையாளம் காணப்பட்டுள்ளபோதிலும், மாணவியின் பெயர் விபரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply