வடகிழக்கு இணைப்பை ஒரு போதும் அனுமதியோம் : ஹிஸ்புல்லா
கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைத்து இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய எந்தவொரு தேவையுமில்லை. இரு மாகாணங்களையும் ஒரு தலைப்பட்சமாக இணைத்தமையால் எமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்தது. எனவே கிழக்கு மாகாணம் தனித்தே இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் இரு மாகாணங்களையும் இணைப்பதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்று புனர் வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலர் தனியலகு பற்றி பேசுகிறார்கள் வட-கிழக்கு இணைக்கப்பட்ட சூழ்நிலையில் எப்போதும் இரு மாகாணங்களும் பிரிக்க முடியாது என்றிருந்தபோதுதான் மு.கா.வின் ஸ்தாபக தலைவர் முஸ்லிம்களுக்கு தனியான அலகு வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால் இப்போது வடக்கு கிழக்கு பிரிந்திருக்கிறது. நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் எந்தவொரு மாகாணசபையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லை. முஸ்லிம் அமைச்சர்களையும் முதலமைச்சரையும் பார்க்கக்கூடிய ஒரே ஒரு மாகாணம் கிழக்கு மாகாணம் மாத்திரம்தான். இந்த நிலையில் வடகிழக்கு இணைப்பை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply