ஐ.நா. பொருளாதார தடைக்கு பதிலடி: குறுகிய தூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை செய்த வடகொரியா

NORTH KOREAஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணுகுண்டு, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. தவிர அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா.

இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. அதற்கு முன்னதாக வடகொரியா மனித உரிமைகள் தொடர்பான முதல் சட்ட மசோதாவை தென்கொரியா தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் இது சட்டமாக்கப்படும். இதனை சட்டமாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் தங்களை எதுவும் செய்யாது என்று ஐ.நா. அமைப்புக்கு சவால் விடும் வகையில், பொருளாதார தடை விதித்த சில மணி நேரங்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. பல்வேறு குறுகியதூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply