ஐ.எஸ் அமைப்பை விட தலிபான்களால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்: ஆப்கானிஸ்தான் அதிகாரி தகவல்
தலிபான்கள் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோரை அவர்கள் கொன்றுள்ளனர் என்றும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு இயக்குநர் அம்ருல்லா சலே கூறியுள்ளார். தலிபான்கள் மூலமாக ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தெற்காசிய அளவில் இந்தியா கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தலைநகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் இதனை அவர் தெரிவித்தார்.
மேலும், “தலிபான்கள் ஏராளமான அமெரிக்கர்களையும், ஆப்கானிஸ்தான்களையும் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர்களையும் கொன்றுள்ளனர். ஐ.எஸ் அமைப்பை விட இந்தியாவின் மீது அதிக பாதிப்பை விளைவிக்க கூடியவர்கள். ஐ.எஸ் அமைப்பை விட அதிகமான கொலைகளையும், வாகன எரிப்புகளையும் தலிபான்கள் செய்துள்ளனர்.” என்று சலே கூறினார்.
ஆப்கானிஸ்தானின் ஜலாலபாத் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply