ஐ.நா.சபைக்கு பெண் தலைவர்: ஒபாமாவிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

obama193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் பான் கி மூனின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள ’வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரம் படைத்த சீனா, ரஷியா, அமெரிக்கா, பிரிட்டைன், பிரான்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் ஐ.நா. சபையின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்பாளரை முன்மொழிய வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளாக ஐ.நா.சபை தலைவர் பதவியில் ஆண்களே இடம்பெற்றுள்ளதால், இந்தமுறை ஒருபெண்ணை இந்த பதவியில் அமர்த்த வேண்டும் என கொலம்பியா உள்ளிட்ட 53 நாடுகள் ஆதரவு திரட்டி வருகின்றன. அதற்கேற்ப, இந்தப் பதவிக்கு போட்டியிட ஏழு பெண் வேட்பாளர்களும் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் இயக்குனர் இரினா போக்கோவா, குரோஷியா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி வெஸ்னா புஸிக், மால்டோவா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி நடாலியா கெர்மென், மகதோனியா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ர்க்ஜப் கெரிம், மான்டெநெக்ரோ நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி இகோர் லக்ஸிக், சோல்வேனியா நாட்டின் முன்னாள் அதிபர் டானிலோ டர்க் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நலவாழ்வுத்துறை முன்னாள் உயர் இயக்குனர் அன்ட்டோனியோ கட்டர்ரெஸ் ஆகியோர் இந்தப் பதவிக்கு போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தகுதிபடைத்த பெண் வேட்பாளரை ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தலைவர் பதவிக்கு முன்மொழிவதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு குடியரசுக் கட்சியை சேர்ந்த ஏழு எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பிராந்தியவாரியான சுழற்சி முறையில்தான் இதுவரை ஐ.நா.சபை தலைவர் நியமிக்கப்பட்டு வந்துள்ளார். ஒருமுறைகூட பாலினரீதியாக அந்தப் பதவி நிரப்பப்படவில்லை. இந்த நிலையை மாற்றி ஐ.நா.சபைக்கு முதல்முறையாக ஒருபெண்ணை தலைவராக பதவியேற்க வைப்பதில் அமெரிக்கா அக்கறை காட்ட வேண்டும் என அந்தக் கடித்ததில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply