தீவிரவாதிகள் ஊடுருவல்: குஜராத்தை தொடர்ந்து டெல்லியிலும் உச்ச கட்ட பாதுகாப்பு
தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவலை அடுத்து குஜராத்தை தொடர்ந்து டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முன்னதாக பாகிஸ்தான் எல்லையோரமுள்ள குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் வழியாக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சுமார் எட்டு முதல் பத்து பேர் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதாக மத்திய உளவு நிறுவனங்களுக்கு நம்பத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, குஜராத்தின் முக்கிய பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குஜராத் வழியாக ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் தலைநகர் டெல்லியின் முக்கிய இடங்களை தாக்க கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் டெல்லியில் முக்கிய கட்டிடங்கள், மால்கள் மற்றும் சந்தை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply