அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து த.தே.கூ விஷேட சந்திப்பு

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது, அரசியல் கைதிகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.குறிப்பாக அரசியல் கைதிகள் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.இதேவேளை, சிறைக்கைதிகள் 13 பேர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய தரப்பினர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply