ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் அலரி மாளிகைக்கு பிரதமர் அழைத்துள்ளார்
ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் அலரி மாளிகைக்கு பிரதமர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆளும் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அலரி மாளிகைக்கு பிரதமர் அழைத்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அலரி மாளிகைக்கு வருமாறு பிரதமர் எழுத்து மூலம் ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் கருத்தரங்கு முதல் தடவையாக நடத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய அரசியலமைப்பு உருவாக்குதல், புதிய வரி முறைமை அறிமுகம், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply