தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒருநாள் பரோல்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ளார். நளினியின் தந்தை சங்கர நாராயணன் உயிரிழந்த 16-ம் நாள் காரிய நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது.எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் பரோல் கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு கொடுத்துள்ளார். நளினி சார்பில் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மனுவை தாக்கல் செய்தார்.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீபதிகள் நளினிக்கு ஒருநாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். 3 நாள் பரோலுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு நாள் பரோல் தரப்பட்டுள்ளது
இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை பரோலில் செல்ல நளினிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதனிடையே, அரசியலமைப்புச் சட்ட 161-வது பிரிவைப் பயன்படுத்த, தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது என்பதால் அந்த பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசு அனுமதி கொடுத்தால் விரைவில் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply