தேமுதிக தனித்தே போட்டி – விஜய்காந்த் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்சென்னையில் தேமுதிகவின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட விஜயகாந்த் இந்த அதிகார பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டார். தேமுதிகவுடனான கூட்டணி தொடர்பில் பல்வேறு யூகங்கள் மற்றும் குழப்பங்கள் நீடித்து வந்த சூழலில், அதற்கு முடிவு கட்டும் விதமாக விஜயகாந்தின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
திமுக, பாஜக மற்றும் மக்கள் நல கூட்டணி என மூன்று தரப்பினரும், தேமுதிக, தங்களுடன் தான் கூட்டணி அமைக்கும் என இறுதி வரை நம்பிக்கை வெளியிட்டு வந்தார்கள்.
குறிப்பாக திமுகவின் தலைவர் கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த 8 ஆம் தேதியன்று கூறிய போதும் கூட, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைவதில் இழுபறி ஏதும் இல்லையென தெரிவித்திருந்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் அவர் சந்தித்த போது, அவரிடம் தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா என்று கேட்டபோது, பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று தெரியவில்லையெனக் கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கண்டிப்பாக சேரும் என்று நம்புவதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
வேறு எந்தக் கட்சிக்கும் தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் திமுக தேமுதிக கூட்டணி நிச்சயம் என்றே கருதப்பட்டும் வந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply