ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான மிகாயில் லெஸின் அடித்துக் கொல்லப்பட்டாரா?

PUTTINரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நண்பரும் அந்நாட்டின் பிரபல கோடீஸ்வர தொழிலதிபருமான மிகாயில் லெஸின் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள டுபான்ட் சர்க்கிள் நட்சத்திர ஓட்டலில் கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.புதினின் மிக நெருங்கிய நண்பர்களில் குறிப்பிடத்தக்கவரான மிகாயில், ரஷிய அரசின் ஊடகத்துறையில் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் என்பதும், இவரது பதவி காலத்தில் ரஷியாவில் ஊடகங்கள் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1999 முதல் 2004-ம் ஆண்டுவரை அந்நாட்டின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறையின் மந்திரியாகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். ரஷிய அரசுக்கு சொந்தமான பிரபல ‘ரஷியா டுடே’ செய்தி சேனல் உருவாவதற்கு இவர் மூலக்காரணமாக திகழ்ந்ததாக கூறப்படுவதுண்டு. தனது பதவிக்காலத்தில் பலகோடி டாலர்கள் மதிப்பில் ஊழல் செய்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவர் சொத்துகளை வாங்கி குவித்து விட்டதாகவும் முன்னர் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாஷிங்டன் நகரின் மையப்பகுதியில் இருக்கும் டுபான்ட் சர்க்கிள் நடசத்திர ஓட்டலில் கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி மிகாயில் லெஸின் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மிக்காயில் லெஸின் இறப்பதற்கு முன்னர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகவும், அவரது தலையில் இருந்த காயங்கள் இதை உறுதிப்படுத்துவதாகவும், அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான பின்னணி என்னவாக இருக்கும்? என்பது தொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply