ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரசாயன தாக்குதலில் ஒரு குழந்தை பலி, பலர் படுகாயம்

Irak-32e7-42ae-918c-3bb415c278de_S_secvpfஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய இரண்டு இரசாயன தாக்குதலில் 3-வயதுடைய ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளார். 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஈராக் நகரின் வடக்கில் கிர்குக் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து அச்சம் காரணமாக ஏராளமானோர் அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். முதல் தாக்குதல் ஈராக்கில் உள்ள சிறிய நகரமான டாஸாவில் நிகழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த இரசாயன தாக்குதலில் உயிரிழந்த 3-வயது சிறுமியின் தந்தை சமீர் வெயிஸ், கிர்குக் மாகாணத்தில் ஐ.எஸ்-க்கு எதிராக போராடி வரும் ஷியா பிரிவு உறுப்பினர்.

 

தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட 8 பேர் பாக்தாத் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த இரசாயன தாக்குதலை அடுத்து, அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஒருவித பயம் மற்றும் பீதி நிலவி வருகின்றது. நிலமையை சமாளிக்க ஜெர்மன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply