மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும்: 85 வீதமானவர்கள் நம்பிக்கை
வடபகுதியில் தற்பொழுது நடந்துவரும் மோதல்கள் மிகவிரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விரைவில் சமாதான சூழ்நிலை மலரும் என 85 சதவீதமான மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.எல்.எம்.டி. மாதாந்த சஞ்சிகை மற்றும் ரி.என்.எஸ். லங்கா நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களே மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருவதுடன், மோதல்களின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமும், பொதுமக்களும் தயார் என அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 85 வீதமானவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், தற்பொழுது விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருப்பதால் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனக் கூறியுள்ளனர்.
அத்துடன், தற்பொழுது நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், மோதல்கள் முடிவடைந்த பின்னர் ‘யுத்தம் மற்றும் இடப்பெயர்வு’ போன்ற அச்சம் இன்றி மரியாதையுடன் வாழமுடியும் என அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 70 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்பொழுது நடந்துவதும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வராது என 16 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டிருப்பதுடன், மோதல்கள் மூலம் பலர் லாபம் தேட முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply