ஏமன் நாட்டில் அமீரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி
ஏமன் நாட்டில் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த அதிபர் மன்சூர் ஹாதியும், அரபு நாடுகளும் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.இதனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சண்டை விமானங்களும் இணைந்து கொண்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏமனில், கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற அமீரகத்தின் போர் விமானம் ஒன்று திடீரென மாயமானது. இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரக அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ ஒப்புக்கொண்டு உள்ளது.
இதற்கிடையே இந்த போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது என்றும் விமானத்தில் சென்ற விமானிகள் ஜாயித் அலி அல் காபி, முகம்மது ஒபைத் அல் ஹமூதி ஆகிய 2 விமானிகளும் உயிரிழந்து விட்டதாக சவுதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply