இதுவரை கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையது என உறுதியாகவில்லை: மலேசியா

malasiaமொசாம்பிக்கில் கிடைத்த இரண்டு விமான பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்பதை கண்டறிய அவை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் டியோங் லாய் தெரிவித்துள்ளார். தற்பது கிடைத்துள்ள விமான பாகங்கள் எதுவும் மாயமான மலேசிய விமானத்துனுடையது என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலோரம் அமைந்துள்ள மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகம் தற்போது மலேசியாவுக்கு வந்துள்ளதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் டியோங் லாய் தெரிவித்துள்ளார். அந்த பாகத்தை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்தார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த குடும்பம் ஒன்று அண்மையில் மொசாம்பிக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளது. அங்கு கரை ஒதுங்கிய மற்றொரு விமான பாகத்தை அந்த குடும்பத்தார் தங்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அந்த பாகத்தை வாங்க மலேசிய குழு தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. அந்த குழு இந்த வாரம் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பாகமும் மலேசியா கொண்டு வரப்பட்ட பிறகு இரண்டு பாகங்களும் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்பதை தெரிந்து கொள்ள ஆய்விற்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் ஏதாவது பாகங்கள் கிடைக்கிறதா என்பதை அறிய குழு ஒன்றை மொசாம்பிக்கிற்கு அனுப்பி வைக்க உள்ளோம். ரீயூனியன் தீவில் கிடைத்த விமான பாகம் பிரான்சிற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு பிரான்ஸ் மற்றும் மலேசிய குழுக்கள் அந்த பாகத்தை ஆய்வு செய்யும். தற்பது கிடைத்துள்ள விமான பாகங்கள் எதுவும் மாயமான மலேசிய விமானத்துனுடையது என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றார். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply