பர்மாவில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக இராணுவம் சாராதவர் அதிபரானார்

parmaபர்மாவில் 50 ஆண்டுகால இராணுவ ஆட்சிக்கு பின்னர் முதல் தடவையாக இராணுவம் அல்லாத அதிபராக டின் ஜோவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் சரித்திர முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவியான ஆன் சான் சூச்சியின் நெருங்கிய சகாவாக இவர் பார்க்கப்படுகிறார்.தனது நியமனம் ஆன் சான் சூச்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அவர் கூறியுள்ளார்.அரசியலமைப்பின்படி அதிபர் பதவிக்கு வருவதில் இருந்து சூச்சி தடுக்கப்பட்டுள்ளார், ஆனால் தானே நாட்டை வழி நடத்துவேன் என்று அவர் கூறியுள்ளார்.அதிபர் தேர்வின் போது மொத்தமான 652 வாக்குகளில் 360 வாக்குகளை டின் ஜோவ் பெற்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply