புலிகளின் ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலார் லெப். கேணல் மதியழகன் உயிரிழந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கப்படுகின்றது. இவர் புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்துள்ளதாகவும்,அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் நெறிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், படையினருக்கு எதிரான மோதலில் மரணமடைந்தார் என விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply