பாகிஸ்தான்: அரசு ஊழியர்கள் வந்த பஸ்சில் குண்டு வெடித்து 15 பேர் பலி

packistanபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இன்று காலை அரசு தலைமைச் செயலக ஊழியர்களை ஏற்றிவந்த பஸ்சில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பலியாகினர்.மர்தான் என்ற இடத்தில் இருந்து வழக்கம்போல் இன்றுகாலை அரசு ஊழியர்களை ஏற்றிவந்த அந்த தனியார் பஸ், பெஷாவர் நகரை நெருங்கியபோது, சுனெஹ்ரி மசூதி அருகே, பஸ்சின் பின்பகுதியில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த் டைம்பாம்ப் ரக குண்டு திடீரென வெடித்தது.இச்சம்பவத்தில் 15 அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயமடைந்த சுமார் 25 பேர் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான-தரமான சிகிச்சை அளிக்குமாறு கைபர் பக்துங்வா மாகாண முதல்மந்திரி பர்வேஸ் கட்டாக் உத்தரவிட்டுள்ளார். எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply