தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள ஜப்பானிய ஊடகவியலாளர்
சிரியாவில் வைத்து கடந்த வருடம் ஜூன் மாதம் காணாமல் போன ஊடகவியலாளர் ஒருவர் தன்னை காப்பாற்றக்கோரும் வீடியோவை ஜப்பானிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.ஜும்பி யசூதா என்ற ஜப்பானிய ஊடகவியலாளர், தன்னை பாதுகாப்பாக மீட்குமாறு உதவி கோருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.ஆனால் தன்னை யார் தடுத்து வைத்துள்ளார்கள், அவர்களது கோரிக்கைகள் என்னவென்பதை அவர் கூறவில்லை. இந்த ஊடகவியலாளர் அல்-கையிதாவுடன் தொடர்புடைய, அல்-நுஸ்ரா முன்னணி கிளர்ச்சிக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.ஜப்பானிய பாதுகாப்பு செய்தியாளர் ஒருவரும் மற்றும் ஆலோசகர் ஒருவருமாக இருவர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளால் கடந்த வருடம் சிரியாவில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இந்த விஷயத்தை கையாண்ட விதத்தில் ஜப்பான் அரசு மீது விமர்சனங்களும் இருந்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply