ஜீ 7 மாநாடு: ஜனாதிபதிக்கு அழைப்பு

g-7இந்த வருடம் நடைபெறும் ஜீ7 மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ள இருப்பதாக அறிய வருகிறது. எதிர்வரும் மே மாதம் நடைபெற இருக்கும் ஜீ7 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முதற்தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அரச தொழில் முயற்சி மற்றும் சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.இதனுடாக இலங்கைக்கு மேலும் பல வெளிநாட்டு உதவிகள் முதலீடுகள் என்பன கிடைக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜீ 7 மாநாடு மே 26,27 ஆம் திகதிகளில் ஜப்பானில் நடைபெறுகிறது.இதில் கனடா,பிரான்ஸ்,ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், பிரித்தானியா,அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியம் என்பன கலந்து கொள்கின்றன.

ஊடக மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அடுத்த மாதத்தில் சீனா இங்கு பாரிய முதலீடுகளை மேற்கொள்ள இருக்கிறது. ஹம்பாந்தோட்டை மற்றும் மத்தல அபிவிருத்திற்காக முதலீடு செய்யப்பட இருக்கிறது.

ஜப்பான் ஜூலையில் முதலீடுகளை மேற்கொள்ள இருக்கிறது.

துறைமுக நகர திட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதிலுள்ள தேவையற்ற அங்கங்கள் அகற்றப்படும். நாமல் ராஜபக்ஷவுக்காக இங்கு கார் ஓட்டப்பந்தய ஓடுபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. சீனாவுக்கு இலவசமாக காணி ஒதுக்குவதும் நீக்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply