பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்படிருந்த தடையை நீக்கி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முஷாரப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.72 வயதான முஷாரப் மீது தேசவிரோத வழக்கு விசாரணை கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான விவகாரத்தில் அவர் மீது தேச விரோத வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், முன்னாள் பெண் அதிபர் பெனாசீர் புட்டோ படுகொலை வழக்கிலும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் முஷாரப் வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இருப்பினும் பாகிஸ்தான் அரசின் முடிவு சட்டத்திற்கு விரோதமானது அதேவருடம் சிந்து உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
பாகிஸ்தான் அரசின் உத்தரவை எதிர்த்து முஷாரப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முஷாரப் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நேற்று உத்தரவிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply