கல்வித்துறை அதிமேம்பாட்டுடன் மிளிர வேண்டிய கட்டம் : சீ.வி. விக்னேஸ்வரன்
கல்வித் துறையானது மிக விரைவில் அதிமேம்பாட்டுடன் மிளிர வேண்டிய ஒரு கட்டத்தை அடைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆறுதல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின், முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கல்வி டிப்ளோமா பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் போன்ற பிரதேசங்களில் வாழும் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான ஊக்கிகளைத் தயாரித்து வழங்குவதாக அமைவதை அறிந்துள்ளேன்.
இது இவர்களின் சிறப்பியல்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இவர்களின் செயற்பாடுகள் கற்பித்தல் கடமைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடாது சமூக வலுவூட்டல் நிகழ்வுகளினூடாக பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி, சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி, சூழல் பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன சேவைகளிலும் ஈடுபட்டுவருவது மகிழ்ச்சியைத் தருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply