புதிய கூட்டணிக்கு மைத்திரி – மஹிந்த குழு பேச்சுவார்த்தை

maithiriஐக்கிய தேசிய கட்சி இல்லாமல் அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி முன்வைக்கும் MAHINDAகோரிக்கைகு, அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிகின்றன.கடந்த இரு மாதங்களில் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுக்கள் இரண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி இல்லாமல் அரசாங்கம் ஒன்றை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அங்கத்தவர்கள், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஹைட்பார்க் மைத்தானத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டு எதிர்கட்சியின் “ஜன சடன” கூட்டத்தின் பின்னர் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் யோசனை கட்சிக்குள் வலுவாக முன்வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply