பிக்குகளுக்கு எதிராக சூழ்சிகள் இடம்பெறுவதில்லை : ஹெல உறுமய

THERARபிக்குமார்களுக்கோ, பௌத்தர்களுக்கோ எதிராக எந்தவித சூழ்ச்சிகளும் இடம்பெறுவதில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.பல்வேறு குற்றசாட்டுக்கள் தொடர்பில் பிக்குமார் கைது செய்யப்படுவது மற்றும் விளக்கமறியலில் வைக்கப்படுவது தொடர்பாக சிலர் போலியான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.என்றாலும் பௌத்தர் இல்லாத ஒருவரின் ஊழல் மற்றும் முறைகேடுகளை மறைப்பதற்காக ஏதோ ஒரு சக்தி செயற்படுவதாகவும் ஓமல்பே சோபித தேரர் பத்தரமுல்லை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேலும் குறிப்பிட்டார் .

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply