பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்த புதிய செயற்திட்டங்கள் அவசியம் : ஜனாதிபதி
இந்நாட்டில் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய செயற்திட்டங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.நேற்று கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் 2016 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாபதிபதி இதனைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவமும் மறுசீரமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது இன்றையைப் பார்க்கிலும் ஒரு சிறந்த நாளையை எமது நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு வழங்கி சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளுக்கு சிறப்பாக முகம்கொடுக்கும் வகையில் இந்நாட்டின் பல்கலைக்கழகக் கல்வி மற்றும் பாடசாலைக் கல்வித் துறைக்குத் தேவையான சகல வசதிகளையும் குறைவின்றி பெற்றுக்கொடுத்து கல்வித் துறையை பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் அச்சிமுஹம்மத் இஷாக், உபவேந்தர் எம்.எம் நாஜிம் ஆகியோர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply